Advertisment

வருமான வரித்துறை சோதனை குறித்து ஆர்யா விளக்கம்

arya about his restaurant it raid

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வரும் ஆர்யா தற்போது நடிகராக ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. தயாரிப்பாளராக சந்தான நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவெல்’ படத்தை தயாரித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். பின்பு அவர் நடத்திவருவதாக சொல்லப்படும் சென்னை அண்ணா நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் சோதனை தொடர்ந்தது.

Advertisment

இந்த சோதனை குறித்து தற்போது ஆர்யா விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறையின் சோதனை நடக்கும் உணவகங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சோதனை நடக்கும் உணவகங்கள் வேறு ஒருவருடையது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Actor Arya it raid
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe