Advertisment

30 வருடங்களுக்கு பிறகு... மீண்டும் இணையும் 'தளபதி' கூட்டணி

arvind samy act with rajinikanth next movie

Advertisment

அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, பிரபல மலையாள நடிகர் விநாயகம்ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து தலைவர் 170 படத்தை டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991ஆம்ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த தளபதி படத்தில் ரஜினியுடன் அரவிந்த்சாமி நடித்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதுரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Arvind Swamy ACTOR RAJINI KANTH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe