Skip to main content

30 வருடங்களுக்கு பிறகு... மீண்டும் இணையும் 'தளபதி' கூட்டணி

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

arvind samy act with rajinikanth next movie

 

அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, பிரபல மலையாள நடிகர் விநாயகம் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இப்படத்தை தொடர்ந்து தலைவர் 170 படத்தை டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த தளபதி படத்தில் ரஜினியுடன் அரவிந்த்சாமி நடித்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

Next Story

ஐ.எம்.டி.பியின் டாப் 10 இந்தியப் படங்கள் - இடம்பெற்ற 2 தமிழ்ப் படங்கள்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

IMDb Top 10 Most Popular Indian Movies of 2023

 

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான டாப் 10 மிகவும் பிரபலமான இந்திய படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளது. முழு பட்டியல் விவரம் பின்வருமாறு...

 

1. ஜவான் (இந்தி)

2. பதான் (இந்தி)

3. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (இந்தி)

4. லியோ (தமிழ்)

5. ஓஎம்ஜி 2 (இந்தி)

6. ஜெயிலர் (தமிழ்)

7. கதார் 2 (இந்தி)

8. தி கேரளா ஸ்டோரி (இந்தி) 

9. து ஜோதி மெயின் மக்கார் (இந்தி)

10. போலா (இந்தி)