arvind swami

மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என அறியப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது அவரது 33-ஆவது நினைவு தினமாகும்.

Advertisment

நடிகர் அரவிந்த் சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில், எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த் சாமி இருக்கும் புகைப்படத்தை படக்குழு சில மாதங்களுக்கு முன்னரே வெளியிட்டிருந்தது. இது பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகியது.

Advertisment

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நினைவுதினத்தையொட்டி, எம்.ஜி.ஆர் தோற்றத்தில் தான் இருக்கும் மேலும் சில புகைப்படங்களை நடிகர் அரவிந்த் சாமி பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.