/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/63_10.jpg)
நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். தற்காலிகமாக 'அருண்விஜய் 33' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அருண் விஜய், பிரியா பவானி சங்கர், விஜயகுமார், ஹரி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இப்பூஜை நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தற்போது, பழனி சுற்றுவட்டாரப்பகுதியில் முதற்கட்டப்படப்பிடிப்பை படக்குழு நடத்தி வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட அருண்விஜய், படப்பிடிப்பை நிறைவு செய்த கையோடு அருகே இருந்த ஜிம்மிற்குச் சென்றார். அருண் விஜய்யின் திடீர் வருகையைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த அங்கிருந்த இளைஞர்கள், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு, அந்த இளைஞர்களுடன் இணைந்து அருண்விஜய் நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் அருண்விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)