இறுதிக்கட்ட பணியில் யானை; லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்

arunvijay starring yaanai movie new update out now

இயக்குநர்ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்கள்இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.ஜி.எஃப் படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="503ace3b-861a-4a2b-8af6-f79484424a52" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_15.jpg" />

இயக்குநர்ஹரிக்கேஉரித்தான கிராமத்துக் கதையை மையமாக கொண்டு ஆக்சன் படமாக இப்படம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர், பழனி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நடிகர் அருண் விஜய்தனது டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தஅவர் டப்பிங் பேசும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

arun vijay director hari priya bhavani shankar
இதையும் படியுங்கள்
Subscribe