Advertisment

பட ஷூட்டிங்கில் அருண்விஜய் காயம்!

arun vijay

Advertisment

ஹரி இயக்கத்தில் அருண்விஜய், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அருண்விஜய் 33'. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்ட படப்பிடிப்பை தற்போது மீண்டும் தொடங்கியுள்ள படக்குழு, காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், சண்டைக்காட்சி படமாக்களின்போது அருண் விஜய்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம், சிறிய அளவில் இருந்ததால், அவர் தொடர்ந்து நடித்தார். இந்த நிலையில், தற்போது வலி அதிகமானதையடுத்து அருண்விஜய் உரிய சிகிச்சை எடுத்துவருகிறார். அருண் விஜய் சிகிச்சை எடுத்துவரும் புகைப்படம் சமூக வலைதளங்களில்வைரலாகிவருகிறது.

arunvijay
இதையும் படியுங்கள்
Subscribe