Advertisment

'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' - டெல்டா பகுதி மக்களுக்கு உதவி வரும் அருண்விஜய் 

arunvijay

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

‘கஜா’ புயல் தாக்கி தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் அருண்விஜய் பாதிப்பு அடைந்த பகுதிகளில் தன்னுடைய நேரடி கண்காணிப்பின் பேரில் நிவாரண பணியினை மேற்கொண்டு உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "புயலால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் அவலம் சொல்லில் அடங்காதது. வெறும் பண மற்றும் பண்ட உதவி மட்டுமே அவர்களின் துயரை ஆற்றாது. நாம் நேரிடையாக களத்தில் இறங்கி பணியாற்றும் அந்த சேவை மனப்பான்மை அவர்களுக்கு மேலும் ஊக்கமும் நிம்மதியும் தரும். இந்த அறிக்கையின் வாயிலாக இளைஞர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்பதை பாதிக்கப்பட்டோருக்கு உணர்த்துங்கள். அது அவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனவலிமையை தரும் " என்று குறிப்பிட்டுள்ளார்.

gaja storm arunvijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe