என்னுடைய படத்தில் நடிக்க ஆட்கள் தேவையென பெண்களைக் குறிவைத்து செயல்படுபவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி நடிகர் அருண்விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எச்சரிக்கை பதிவு. என்னுடைய பெயரைப் பயன்படுத்தி படத்திற்கு நடிக்க ஆட்கள் தேவையென பெண்களைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. இது உங்களை வீழ்த்துவதற்கான பொறி. இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சைபர் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் பெயரைப் பயன்படுத்தி இது போன்ற மோசடி வேலையில் ஈடுபட சிலர் முயற்சித்த நிலையில், அவரும் இதுபோல கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.