Advertisment

'இதயதளபதி' விஜய்க்கு நன்றி தெரிவித்த அருண்ராஜா காமராஜ்

irumbu thirai.jpeg

நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக தயாரிக்கும் படத்தை தன் கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். 'கனா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும், அவரின் தந்தையாக நடிகர் சத்யராஜும்நடிக்கிறார். இந்நிலையில் நேற்று இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தின் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு அருண்ராஜா காமராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுருப்பதாவது...."என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டது. உங்களிடம் இருந்து வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்றதில் நான் பாக்கியம் செய்துள்ளேன். உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் தகாது. உங்களை எப்போதுமே நேசிக்கும் அருண்ராஜா காமராஜ்" என்று பதிவிட்டிருந்தார்.

Advertisment
sivakarthikeyan aishwaryarajesh arunrajakamaraja taamilcinemaupdates
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe