Skip to main content

'இதயதளபதி' விஜய்க்கு நன்றி தெரிவித்த அருண்ராஜா காமராஜ்

Published on 16/05/2018 | Edited on 17/05/2018
irumbu thirai.jpeg

 

 


நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக தயாரிக்கும் படத்தை தன் கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். 'கனா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும், அவரின் தந்தையாக நடிகர் சத்யராஜும் நடிக்கிறார். இந்நிலையில் நேற்று இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும்  மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தின் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு அருண்ராஜா காமராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுருப்பதாவது...."என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டது. உங்களிடம் இருந்து வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்றதில் நான் பாக்கியம் செய்துள்ளேன். உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் தகாது. உங்களை எப்போதுமே நேசிக்கும் அருண்ராஜா காமராஜ்" என்று பதிவிட்டிருந்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கனா' ஏற்படுத்திய ஸ்பார்க்கில் இதை நாங்க செஞ்சோம்' - இளைஞர்களை தூண்டிய சிவகார்த்திகேயன்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் லோக்கல்' படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

 

sivakarthikeyan

 

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர். இதுகுறித்து இயக்குநர்கள் பொன்ராம் & எம்.பி.கோபி அவர்கள் பேசும்போது... "நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா  நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த 'கனா' படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

 

 

அதன் காரணமாக திரு.சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம் அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அதற்கு பதிலாக அவருடைய கனா பட ஹீரோ தர்ஷன் அவர்களையும் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ் அவர்களையும் அவர் ரசிகர் மன்ற மாநில  தலைவர் மோகன் தாஸ் அவர்களையும் & மிஸ்டர் லோக்கல் பட இயக்குனர் ராஜேஷ்.எம்  அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார். இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி".

 


 

Next Story

நான் யாருக்கு செய்றேன்னு சொல்லமாட்டேன், ஆனா செய்வேன் - சிவகார்த்திகேயன்  

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
siva

 

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, இவர்களுடன் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசியபோது...

 

"நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ட்விட்டரில் ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு ஐஸ்வர்யா தகுதியானவர். 20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். 

 

 

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. 'அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா' என்ற பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு ஒதுக்கி உதவி செய்ய இருக்கிறேன். நான் யாருக்கு என்ன செய்யப்போகிறேன் என்று நிச்சயமாக சொல்ல போவதில்லை. ஆனால் இந்த படம் எப்படி பல புதுமுக கலைஞர்களின் வாழ்க்கையை மாற்றியதோ அதேபோல் எங்கேயோ எதோ ஒரு மூலையில் இருக்கும் நலிந்த விவசாயின் வாழ்க்கையை கண்டிப்பாக நான் செய்யப்போகும் உதவி மாற்றும். இதை நான் சொல்லாமல் செய்யவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தில் இவ்வளவு விஷயங்களை சொல்லிவிட்டு இதை இங்கு பதிவு செய்யாமல் போனால் தப்பு என்று தோன்றியது. நாம் மட்டும் இந்த வெற்றியை கொண்டாடினால் நன்றாக இருக்காது. இது விவசாயிகளுக்கும் போய் சேர வேண்டும்" என்றார்.