Skip to main content

அருண்ராஜா காமராஜ் - ஜெய் கூட்டணியில் வெப் சீரிஸ்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

arunraja kamaraj next with jai for a web series titled as label

 

தமிழில் 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். 'ராஜா ராணி' உள்ளிட்ட சில படங்களிலும் 'கபாலி' உள்ளிட்ட சில படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். 

 

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த தொடருக்கு 'லேபிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  

 

'லேபிள்' வெப் சீரிஸை பற்றி இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கூறுகையில், "ஒருவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை பொறுத்தே அவனது குணாதிசயம் இருக்கும் என்கிற பொதுப்படை எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது. இதுவே அவர்களை தவறான வழியை நோக்கிச் செல்ல காரணமாகவும் அமைகிறது. இப்படி தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை ஒரு சிலரால் மட்டுமே மாற்றியமைக்கவும் முடிகிறது. ஆனால் இந்த சமூகம் தனது பொதுப்படையான பார்வையை மாற்றியமைக்குமேயானால் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

  'உப்பு புளி காரம்' - வெப் சீரிஸின் ரிலீஸ் அப்டேட்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Uppu Puli Kaaram release update

ரமேஷ் பாரதி இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள வெப் சீரிஸ் 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷேக் இசையமைத்துள்ள இந்த சீரிஸ், ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி நடப்பவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சீரிஸின் 'குடும்பப் பாட்டு' எனும் தீம் பாடல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த சீரிஸின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 30ஆம் தேதி இந்த சீரிஸ் ஹாட்ஸ்டார் ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல திருப்பங்களுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story

அனிமேஷன் சீரிஸாக வெளியாகும் பாகுபலி

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
bahubali to come in animation series

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெயாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படட்தின் முன் கதை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாகுபலி மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையில் அறியப்படாத பல திருப்பங்களையும், மகிஷ்மதியை பற்றியதாகவும் உருவாகியிருக்கிறது. இந்த சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .