irumbu thirai.jpeg

Advertisment

arunraja

'நெருப்புடா' பாடல் புகழ் அருண்ராஜா காமராஜ் தற்போது மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தை இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இதில் நடுத்தர வீட்டுப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அருண்ராஜா காமராஜின் ஆருயிர் நண்பர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மே 15ஆம் தேதி (நாளை) வெளிவிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.