Advertisment

அருண்ராஜா காமராஜ் - ஜெய் கூட்டணியின் 'லேபில்' ; ரிலீஸ் தேதி அறிவிப்பு

arunraja kamaraj, jai in label web series release update

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடிக்கிறார்.மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

Advertisment

இந்த சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நிலையில், இந்த சீரிஸின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாகிறது.

web series arunrajakamaraj jai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe