முன்னணி நடிகரை இயக்கும் அருண்ராஜா காமராஜ்

arunraja kamaraj directing karthi next movie

'பொன்னியின் செல்வன்', 'விருமன்' ஆகிய படங்களில்நடித்து முடித்துள்ள கார்த்தி தற்போது இயக்குநர்மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைபிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்தாகஇயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'ஆர்டிகள்15' படத்தை தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். சர்தார் படத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு அருண்ராஜா காமராஜ் படத்தின் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்தஅறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor karthi arunrajakamaraj nenjukku needhi
இதையும் படியுங்கள்
Subscribe