'அருண்மொழி வர்மன்' - புது வீடியோவை வெளியிட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழு

'Arunmozhi Varman' - 'Ponniyin Selvan' film team has released a new video

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு 'அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்' என்ற தலைப்பில் ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இதில் அருண்மொழி வர்மன் எப்படி ராஜ ராஜ சோழன் என்று அழைக்கப்படுகிறான், அதன் பின்னணியில் உள்ள கதைகளை பற்றியும் அவர் செய்த சில சாதனைகளைப் பற்றியும் வரலாற்றாசிரியர், எழுத்தாளர் உள்ளிட்ட சிலர் விவரிக்கின்றனர். இப்படத்தின் அருண்மொழி வர்மனின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானபோது பலரும் 'அருள்மொழி வர்மன்' என்பது தான் சரியான பெயர் என கமெண்ட் செய்து வந்தனர். இதனிடையே ரசிகர்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe