
அருந்ததீ என்னும் பிரமாண்ட படத்தை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா நேற்று உடல்நலக் குறைவால் திடீரென்று காலமானார்.
இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இதுதாண்டா போலீஸ் மற்றும் விஜய சாந்தி ஐபிஎஸ் ஆகிய படங்கள் தமிழ் டப்பிங்கிளேயே செம ஹிட் அடித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் நடிகை அனுஷ்கா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான படம் அருந்ததீ. இது தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் நல்லவே ஹிட் அடித்தது.
சமீப காலமாகவே நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த கோடி ராமகிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென்று அவர் மரணமடைந்து விட்டார். கோடி ராமகிருஷ்ணாவின் மறைவால் தமிழ் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.