/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_276.jpg)
இயக்குநர்ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் 'யானை' படத்தில் நடித்துவருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துவருகிறார். இவர்கள் இருவரும் 'மாஃபியா' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், இமான் அண்ணாச்சி, யோகி பாபு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இயக்குநர் ஹரிக்கேஉரித்தான கிராமத்து கதையை மையமாக கொண்ட ஆக்சன் படமாக இப்படம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர், பழனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக காரைக்குடி சென்றுள்ளனர். இத்தகவலை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)