Advertisment

சூர்யா படத்தில் அறிமுகமாகும் ஜூனியர் அருண் விஜய்...

arun vijay

Advertisment

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரானவிஜயகுமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில், கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தை, நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்மற்றும் ஆர்.பி. ஃபிலிம்ஸ் எஸ்.ஆர். ரமேஷ் பாபு ஆகியோர்இணைத் தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தை சரோவ் சண்முகம் என்பவர் இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார். மேலும், உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.

Advertisment

இப்படம் ஒரு குழந்தைக்கும் ஒரு நாய்க்குட்டிக்கும் இடையே இருக்கும் அழகான உறவைச் சொல்லும் கதை என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஊட்டி பின்னணியில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

actor surya arunvijay
இதையும் படியுங்கள்
Subscribe