Skip to main content

தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய்க்கு குவியும் படங்கள்...

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

கார்த்திக் நாரேன், மிகவும் குறைந்த வயதில் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றியும் பெற்றவர். இயக்கிய துருவங்கள் பதினாறு படம் நல்ல ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பின்பு கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோரை வைத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட தயாரிப்பு பிரச்சனையால் படம் முடிந்தும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
 

virat kholi

 

 

இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் 'மாஃபியா'. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 

இந்த படத்திற்கான எழுத்து வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஷூட்டிங் வருகிற ஜூலை 6ஆம் தேதியிலிருந்து தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் நரேன் இந்த படத்தை ஒரே கட்டமாக 35 நாட்களில் சென்னையை சுற்றி எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 

தற்போது அருண் விஜய் 'பாக்ஸர்', 'சாஹோ' மற்றும் 'அக்னிச் சிறகுகள்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்களுக்கு இடையே 'மாஃபியா' படத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்