போஸ்டருடன் புதிய அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய் படக்குழு

Arun Vijay's crew releases new update with poster

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்த ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது, ஆனால் கமலின் 'விக்ரம்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் படத்தை ஜூலை 1-ஆம் தேதி வெளியிடவுள்ளோம் என சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் 'யானை' படத்தின் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சண்டாளியே' பாடலின் லிரிக் வீடியோ நாளை (17.06.2022) மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்பாடல் கிராமத்து காதல் பாடலாக இருக்கும் என தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

arunvijay director hari Yaanai
இதையும் படியுங்கள்
Subscribe