Advertisment

ட்ரெண்டிங்கில் ‘பார்டர்’... அருண் விஜய் பட ட்ரைலருக்கு கிடைத்த அமோக வரவேற்பு!

Border

Advertisment

‘குற்றம் 23’ பட வெற்றியைத் தொடர்ந்து, அருண் விஜய் - இயக்குநர் அறிவழகன் கூட்டணி ‘பார்டர்’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. அருண்விஜய் உளவு அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில், நடிகை ரெஜினா கெசண்டரா மற்றும் ஸ்டீபி பட்டேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலரானது நேற்று (12.09.2021) வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்ஷன்கள் நிறைந்த இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம் பெற்ற நிலையில், ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தற்போதுவரை 1.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த ட்ரைலர், யூ-டியூப் தளத்தில் ட்ரெண்டிங் வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. ‘பார்டர்’ ட்ரைலருக்கு எதிர்பார்த்ததைவிட கிடைத்த அதிகமான வரவேற்பு, படக்குழுவினருக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

arun vijay border movie
இதையும் படியுங்கள்
Subscribe