அருண் விஜய் பட ட்ரைலர் ; சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்

arun vijay 'yaanai' trailer released by sivakarthikeyan

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்த ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'யானை' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். வழக்கமான ஹரி படம் போல் ஆக்ஷன், காமெடி, எமோஷ்னல் கலந்து விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor sivakarthikeyan arun vijay director hari priya bhavani shankar Yaanai
இதையும் படியுங்கள்
Subscribe