இயக்குநர்ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்கள்இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.ஜி.எஃப் படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இயக்குநர்ஹரிக்கேஉரித்தான கிராமத்து கதையை மையமாக கொண்டு ஆக்சன் படமாக இப்படம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர், பழனி சுற்று வட்டார பகுதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காகக் காரைக்குடிக்குச் சென்றது. இதனைசமீபத்திய ட்வீட் மூலம் நடிகர் அருண் விஜய் உறுதி செய்தார்.
இந்நிலையில் ஹரி இயக்கும் 'யானை' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் தெரிவித்துள்ளார். அத்துடன் படத்தின்நாயகி பிரியா பவானி சங்கர் மற்றும்இயக்குநர் ஹரி குடும்பத்தினருடன் ராதிகா சரத்குமார் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் படம் குறித்தஅடுத்தடுத்துஅப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Lots of hard work and a wrap , let’s not forget the laughs Priya and Preetha Hari #Yaanai!!❤?#DirectorHARI#Karaikudi#LastLegOfShoot@DrumsticksProd@arunvijayno1@gvprakash@priya_Bshankar@realradikaa@thondankani@iYogiBabu@editoranthony@Ammu_Abhiramipic.twitter.com/FXe1mu7kyd
— Radikaa Sarathkumar (@realradikaa) November 3, 2021