arun vijay yaanai movie release postponed

ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபுஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி விபிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, யானை படத்தை வரும் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் யானை படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு மாற்றி வைத்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் யானை படத்தின் தேதியை மாற்றி வைக்குமாறுகேட்டுக் கொண்டதற்கு இணங்க ரிலீஸ் தேதியை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisment