அருண் விஜய்யின் 'யானை' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

arun vijay yaanai movie ott release date announced

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'யானை'. 'ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.

இந்நிலையில் 'யானை' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 19-ஆம் தேதி 'ஜீ 5' ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அருண் விஜய், படத்தின் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து புதிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்கள்.

arun vijay Yaanai
இதையும் படியுங்கள்
Subscribe