/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/84_10.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அருண் விஜய் 33'. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, படப்பிடிப்பை மீண்டும் படக்குழு தொடங்கியுள்ளது. காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவந்த படக்குழு, தற்போது நாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.
நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் வீதிகளில் சில முக்கிய காட்சிகளை இயக்குநர் ஹரி படமாக்கினார். படப்பிடிப்பின்போது கிடைத்த இடைவேளை நேரத்தில் நடிகர் அருண் விஜய், இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத்தலமான நாகூர் தர்காவிற்குச் சென்று தொழுகை நடத்தினார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. அப்புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய், "எம்மதமும் சம்மதம். அன்பைப் பரப்புங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)