/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/380_12.jpg)
ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் காமெடி ஃபேண்டசி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு அடுத்த அறிவிப்பாக சுந்தர்.சி. இப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கதாநாயகனாக பயணித்து வந்த நிலையில் என்னை அறிந்தால் படம் மூலம் வில்லனாகவும் நடிக்க தொடங்கினார். பின்பு எந்த தமிழ் படத்திலும்வில்லனாக நடிக்காத அவர் தற்போது இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இப்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் அது வில்லன் கதாபாத்திரம் என ஒரு தகவல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)