Arun Vijay is undergoing treatment in Kerala

இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அச்சம் என்பது இல்லையே'. எம்.ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க லண்டன் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. அதனை சமீபத்தில் தெரிவித்த அருண் விஜய் தற்போது அந்த காயத்திற்கு கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் பாரம்பரிய ஆயுர்வேத முறையில் முழங்காலில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தற்போது நன்றாக உணர்வதாக தெரிவித்துள்ளார். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சொல்லியுள்ளார்.

Advertisment

சிகிச்சை பெற்றும் வரும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் அருண் விஜய் பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு கீழ் நடிகர் சாம்ஸ், "விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் துள்ளி குதித்து வாருங்கள்" என கமெண்ட் செய்துள்ளார். இதையடுத்து அவர் பூரண குணமடைந்து நலம் பெற அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.