/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/482_2.jpg)
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் மகிழ்திருமேனிஇயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் தடம். இதில்ஸ்மிருதி வெங்கட், தன்யா ஹோப், வித்யா ப்ரதீப்உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அருண் விஜய் படங்களிலே இந்த படம் தான் அதிக வசூல் செய்த படமாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிப்பில் ரெட் என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தடம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் தமிழில் அருண் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் ஆதித்யா ராய் கபூர் நடிக்கவுள்ளார். மிர்னால் தாகூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை வர்தன் கேட்கர்இயக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்புசெப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ள நிலையில் நடிகர் அருண் விஜய் நேரில் சென்று படக்குழுவை சந்தித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)