
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு 'அருண் விஜய் 31' எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத், டெல்லி என முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
'குற்றம் 23' படத்திற்குப் பிறகு இயக்குனர் அறிவழகன், அருண் விஜய்யுடன் இணைந்துள்ளார்.இப்படத்தின் நாயகியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
Follow Us