Skip to main content

"போதைய விட்டு வாலே..." -  அடுத்த அப்டேட்டை அருண் விஜய் 

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

arun vijay starring yaanai movie second song release date announced

 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்கள் இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு  ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

 

இயக்குநர் ஹரிக்கே உரித்தான கிராமத்துக் கதையை மையமாக கொண்டு ஆக்சன் படமாக இப்படம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர், பழனி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழு அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி "போதைய விட்டு வாலே..." என தொடங்கும் இரண்டாவது பாடல் வரும் 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்