/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/200_16.jpg)
ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் ட்ராமா படம் ’சினம்’. இப்படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் அருண் விஜய் பேசுகையில், “இந்த படம் தியேட்டரில் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தொடர்புப்படுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தின் பாரிவெங்கட் கதாபாத்திரம் இருக்கும். எனது முந்தையை படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த படத்தில் உணர்வுப்பூர்வமான பல அம்சங்கள் உள்ளன. அதை உருவாக்கிய இயக்குநர் குமரவேலனுக்கு நன்றி.
இந்த படத்தை தயாரித்த என் தந்தைக்கு நன்றி. என்னை நம்பி அவர் ஓகே சொன்னார். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளர் ஷபீருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன். படத்தில் நான் ஒரு பாடலை பாடியுள்ளேன். அதை ஆளவந்தானோடு ஒப்பிட்டு சிலர் பேசினார்கள். கமல் சார் கமல் சார்தான். அதனால் இந்த ஒப்பீடு வேண்டாம். சினம் அனைவருக்கும் பிடிக்கக் கூடிய படமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)