Advertisment

“படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள்” - அனுபவம் பகிர்ந்த அருண் விஜய்

arun vijay speech in mission trailer launch event

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் திருநாள்விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் அருண் விஜய் பேசியதாவது, "பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் 'மிஷன் சாப்டர்1' என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பை கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம். அதை செய்து கொடுத்த லைகாவுக்கு நன்றி. நான் இதுவரை நடித்த படங்களிலேயே 'மிஷன் சாப்டர்1' தான் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம். இந்த ஸ்கிரிப்ட் கொடுத்த விஜய்க்கு நன்றி. ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.

Advertisment

எமி ஜாக்சன், நிமிஷா எனப் பலரும் இதில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். லண்டன், சென்னை ஆகிய இடங்களில் இதை படமாக்கினோம். நாலரை ஏக்கரில் மிகப்பெரிய ஜெயில் செட்டை இங்கு உருவாக்கினோம். சில காரணங்களால் அது சேதமானது. அப்போது கூட செலவைப் பற்றி பொருட்படுத்தாது லைகா புரொடக்‌ஷனஸ் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். தொழில்நுட்பக் குழுவும் படத்திற்குப் பெரிய பலம். படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் அதற்கான நேரமே தராமல் திட்டமிட்டபடி சரியாக வேலை செய்து முடித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விஜய் அழகாக மேனேஜ் செய்திருக்கிறார். என்னை வேறொரு கோணத்தில் இந்தப் படம் காட்டும். ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்து விஷயங்களிலும் புதிதாக முயற்சி செய்திருக்கிறோம். இப்படியான கதையைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பொங்கல் அன்று உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். எங்களுடன் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்றார்.

Advertisment

இயக்குநர் விஜய் பேசியதாவது, "நிறைய படங்கள் இயக்கி இருக்கிறேன். ஆனால், இது புது அனுபவமாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுவாதி, ராஜசேகர் சாருக்கு நன்றி. எங்களைப் போலவே இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸூக்கும் நன்றி. தமிழ்க்குமரன் சார் இந்தப் படத்தைப் பார்த்ததும் உடனே இணைத் தயாரிப்பு செய்கிறேன் என்று சொன்னார். அதன்பிறகு தான் இந்தப் படம் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது. 'கேப்டன் மில்லர்', 'அயலான்' என இரண்டு அசுரத்தனமான படங்கள் வருகிறது. இந்த வரிசையில் நாங்களும் வருகிறோம். பல சிரமங்களைத் தாண்டித்தான் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். அருண் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தார். சினிமாவில் உள்ள திறமையான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் நிமிஷாவும் இருப்பார். எமி, இயல் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயல் கதாபாத்திரம்தான் படத்தின் ஆன்மா. தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர். இப்போது சினிமா தியேட்டருக்கான படங்கள், டிஜிட்டல் சினிமா எனப் பிரிந்துள்ளது. நிச்சயம் 'மிஷன் சாப்டர்1' உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். எல்லாப் படங்களுமே சேர்ந்து ஜெயிக்க வேண்டும்" என்றார்.

al vijay arun vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe