Advertisment

"இது பெருமையான தருணம்..." தன்னுடைய மகன் குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி!

arun vijay son

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜயின் மகன் அர்னவ் தற்போது திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். குழந்தைக்கும் நாய்க்கும் இடையே உள்ள உறவைப் பற்றி பேசும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியான நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்து இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது.

Advertisment

இப்படத்திற்கான டப்பிங்கில் அர்னவ் கலந்துகொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அருண் விஜய், "என்னுடைய மகன் அவனுடைய அறிமுகப் படத்திற்கான டப்பிங்கில் ஈடுபடுவதைப் பார்ப்பது பெருமையான தருணமாக உள்ளது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அர்னவ், நடிகர் அருண் விஜய் குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வரும் மூன்றாவது தலைமுறையாகும். இதையடுத்து, திரைத்துறையில் பெரிய நடிகராக உயர அருண்விஜய் மகனுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

arun vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe