அருண் விஜய்யின் சினம் பட அப்டேட்!

arun vijay

தடம் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகினார் அருண் விஜய். அதில் ஒரு படம்தான் சினம். தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்.

இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளை தொடங்கலாம் என்று இருந்தபோது,கரோனா அச்சுறுத்தலால் சினிமா துறை முடங்கியது. அண்மையில் இறுதிக்கட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சினம் படக்குழு டப்பிங் பணிகளை தொடங்கியது.

அருண் விஜய் டப்பிங் பேச வந்தபோது புகைப்படங்கள் வெளியாகின. அப்போது அவருடைய லுக் பெரிதும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் 2வது லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

arun vijay
இதையும் படியுங்கள்
Subscribe