arun vijay

இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சினம்'. இது நடிகர் அருண் விஜய்யின் 30வது படமாகும். போலீஸ் அதிகாரியாக நடிகர் அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாரான வேளையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. மேலும், படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடும் யோசனையில் 'சினம்' படக்குழு இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

Advertisment

இந்த நிலையில், 'சினம்' படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் அருண் விஜய் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'சினம்' படத்தின் புதிய போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அருண் விஜய், 'சினம்' திரைப்படம் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். திரையங்குகள் திறக்கப்பட்டவுடன் 'சினம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.