மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் க்டந்த 14-ந் தேதிவெளியான படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில் வரவேற்பை பெற்று வருகிறது.
உதயநிதி ஸ்டாலின், படம் வெளியாவதற்கு முன்பாகவே படக்குழுவையும் சிவகார்த்திகேயனையும் பாராட்டினார். அண்மையில் இயக்குநர் ஷங்கர் மடோன் அஸ்வின் திரைத்துறையில் நிலைத்து நிற்பார் எனவும் நிச்சயமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியான ஒரு புது அனுபவம் கிடைத்ததாகவும் படக்குழுவினரை பாராட்டினார். மேலும் பலரும் விஜய் சேதுபதியின் குரல் படத்திற்கு பக்கபலமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அருண் விஜய் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாவீரன் பார்த்தேன். முழுமையாக ரசித்தேன். சிவகார்த்திகேயன் பிரதர், ஒரு நிதானமான கதாபாத்திரத்தில் உங்களின் நடிப்பு அற்புதமாக இருந்தது" என குறிப்பிட்டு யோகிபாபு, விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.