Advertisment

''அவர் கார் ஏறும் வரை கூட வந்து வழி அனுப்புவார்'' - அருண் விஜய்  

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டு பேசும்போது...

Advertisment

arun vijay

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் போன்ற ஒரு நடிகர் இந்த மாதிரி மாதிரியான படத்தை தேர்வு செய்ததற்கு ஒரு தைரியம் வேண்டும். அதுவும் இயக்குனர் சுஜீத் மேல் இவர் வைத்த நம்பிக்கைக்கு ஹேட்ஸ் ஆஃப். இரண்டரை வருடத்திற்கு பிறகு வரும் படம் என்பதால் பிரபாஸ் மிகவும் கவனமாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் எவ்வளவோ பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இந்தப்படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறார். அவர் சாதாரணமாக நடந்து போகக்கூடிய ஒரு ஷாட்டிற்கு அவ்வளவு மெனக்கெடுவார். அந்த அளவு அவர் சினிமா மேலும், நடிப்பு மேலும் பற்று உள்ளவர். இன்னும் சொல்லப்போனால் பிரபாஸ் எந்த அளவு பணிவானவர் என்றால் அவருடன் பணிபுரியும் எந்த ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும் அவர்கள் கார் ஏறும் வரை உடன் சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுதான் செல்வார். அந்த அளவு அக்கறையானவர். இதுபோல் ஒருவருடன் பணிபுரிந்து சந்தோஷமாக உள்ளது.

Advertisment

இப்படத்தில் எனக்கு நிறைய சவால்கள் இருந்தது. குறிப்பாக ஹிந்தி பேசி நடிப்பதில் சிரமப்பட்டேன். இருந்தும் ஒரு பண்டிட் உதவியுடன் நன்றாக ஹிந்தி பேசியுள்ளேன். ஒருமுறை என் ஹிந்தி வசன உச்சரிப்பை பார்த்து உடன் நடித்த மந்திரா பேடி என்னை வெகுவாக பாராட்டினார். ஆனால் நானோ அதை மனப்பாடம் செய்து ஒப்பித்தேன் என உண்மையை சொன்னேன். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். இருந்தும் எனக்கு வேறொருவர் தான் ஹிந்திக்கு குரல் கொடுத்துள்ளார். எனக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது'' என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/WDBSp-jez3g.jpg?itok=ohci6iXG","video_url":" Video (Responsive, autoplaying)."]}

prabhas saaho
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe