தளபதி 65 படத்தில் வில்லனாக அவர்! ஹீரோயினாக இவர்!

fetewfg

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பொங்கலன்று வெளியான 'மாஸ்டர்' படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தளபதி விஜய் அடுத்தாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் 'புட்ட பொம்மா' தெலுங்கு பாடல் புகழ் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் முகமூடி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

actor vijay thalapathy 65
இதையும் படியுங்கள்
Subscribe