Advertisment

சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் அருண் விஜய் கூட்டணி

arun vijay next movie update

அருண் விஜய் கடைசியாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பலரது கவனத்தையும்ஈர்த்தது.

Advertisment

இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அருண் விஜய்யின் 36ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க பாபி பாலசந்தர் வழங்குகிறார்.

Advertisment

இப்பட பூஜையில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப் பணிகளை தொடங்கி வைத்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படப் பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

arun vijay lokesh kanagaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe