
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக 'சினம்' படம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே முன்னணி இயக்குநரான ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பார் என தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இதன் மூலம் நான்கு வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். 'அச்சம் என்பது இல்லையே' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீ ஷிரிடி சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.