Advertisment

'விஜய்'களின் கூட்டணியில் புதிய படம் - வெளியான தகவல்

arun vijay next with a.l vijay - information released

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'யானை' படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே அறிவழகன் இயக்கத்தில் 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான 'ஏவிஎம் புரடக்சன்ஸ்' தயாரித்துள்ள முதல் வெப் சீரிஸான இந்த சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 19-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் அருண் விஜய் அடுத்ததாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பை முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

al vijay arun vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe