arun vijay in mission thanks giving meet

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்1' படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது.

Advertisment

நடிகர் அருண் விஜய் பேசியதாவது, "நல்ல கதையுள்ள படங்களை மக்களும் மீடியாவும் எப்போதும் கைவிட்டதே இல்லை. ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சனை இருக்கும். இந்தப் படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது. புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு நான் விஜய் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு அழகான கதையில் என் பலத்தை அவர் சரியாக உபயோகப்படுத்தியுள்ளார். வரும் வாரத்தில் இந்தப் படத்திற்கு இன்னும் அதிக ஸ்கிரீன் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படத்திற்கு ஆரம்பத்தில் அதிக பிரச்சனை இருந்தது. ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது. அவை அனைத்தையும் எங்களுக்குத் தராமல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த வெற்றி அவர்களைத்தான் சாரும். நீங்கள் தரும் ஆதரவுதான் என்னை புதுப்புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறது. உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களைத்தான் இனி தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Advertisment

இயக்குநர் விஜய் பேசுகையில், "எங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடம் இது. இந்த தேங்க்ஸ் மீட் எதற்கு என்று முதலில் சொல்லி விடுகிறேன். படம் வெளியாகும்போது எங்களுக்குத் திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது.இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது. எங்கோ பிரிவியூ ஷோ போவது போலதான் இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியான ஒரு ஃபீல் கிடைக்கவே இல்லை. ஆனால், படத்தில் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்து நீங்கள் புஷ் செய்வதுதான் படத்தை இன்னும் அதிக பார்வையாளர்களுக்குக் கொண்டு போகும் என மோகன் சார், விஜயகுமார் சார் சொன்னார்கள். அதன்படிதான் நாங்கள் நடந்து கொண்டு வருகிறோம். படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு தானாகவே ஸ்கிரீன் அதிகப்படுத்தினார்கள். இன்றைய தேதியில் நிறைய திரையரங்குகளில் நிறைய ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறொரு ஜானரில் நான் செய்திருக்கும் படம் இது. படப்பிடிப்பில் செட் பலமுறை விழுந்து, மீண்டும் அதை உருவாக்கினோம். இப்படி படப்பிடிப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் சார் குதிக்கும் காட்சி ஒன்று வரும். அது சிஜி கிடையாது. டூப் போடாமல் அவரே செய்தார். அது மேஜிக் போல நடந்துவிட்டது" என்றார்.