arun vijay Mission Chapter 1 Trailer released

ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே'. லைகா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், மேக்கிங் வீடியோ, முன்னரே வெளியான நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது. இது அப்பா மகள் இருவருக்கும் இடையில் இருக்கும் பாசத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில், தன்னுடைய வேலைக்காக வெளிநாடு செல்லும் அருண் விஜய், அங்கு ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதை ஆக்‌ஷன், செண்டிமெண்ட் உள்ளிட்டவைகள் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது.

அருண் விஜய், சுத்தீலுடன் வரும் ஆக்‌ஷன் காட்சிகள், குழந்தையை பிரிந்த வலியோடு பேசும், “அவனுக்கு என் கண்ணுலபயம் தெரியாத வரைக்கும் தான் என் குழந்தை safe” போன்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற பொங்கலைமுன்னிட்டு 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisment