தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜய், ‘பார்டர்’, ‘அக்னி சிறகுகள்’, ‘யானை’, ‘வா டீல்’, ‘பாக்ஸர்’, ‘சினம்’ உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில், ‘வா டீல்’ திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டியும், ‘பார்டர்’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதியும் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் அடுத்ததாக இயக்குநர் சுசீந்திரனுடன் கைகோர்க்க உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சுசீந்திரன் அருண் விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார். அந்தக் கதை அருண் விஜய்க்கு பிடித்துப்போனதால்அதில் நடிக்க அவர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.