படங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...

அருண் விஜய்க்கு பல வருடங்கள் கழித்து சரியான ஹிட்டாக அமைந்த படம் ‘குற்றம் 23’.இந்த படத்தை ஈரம், வல்லினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கினார். சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்டராக அருண் விஜய் தமிழ் சினிமாவில் பேக் கொடுத்திருந்தாலும், தனித்து ஒரு ஹீரோவாக அவருக்கு ‘கம் பேக்’ கொடுத்த படம் என்றால் அது குற்றம் 23 தான். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது.

arun vijay

‘ஆல் இன் ஆல்’ பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளது. சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங்கை நடத்த படக்கு திட்டமிட்டுள்ளது. இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் கலந்து உருவாக்க இருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க இருக்கிறார்.

alt="iruttu" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d7e1166b-73a3-422f-8811-10625f6fe330" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_20.jpg" />

தடம் வெற்றியை தொடர்ந்து மாஃபியா, அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் என்று அருன் விஜய் படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்க மீண்டும் ஒரு புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

arun vijay
இதையும் படியுங்கள்
Subscribe