அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கெசண்ட்ரா, ஸ்டீபி பட்டேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. ‘குற்றம் 23’ பட வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் - அறிவழகன் கூட்டணி இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அருண் விஜய் உளவு அதிகாரியாக நடித்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இப்படம் நவம்பர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் அறிவழகனுக்கும் ஒளிப்பதிவாளர் ராஜசேகருக்கும் நடிகர் அருண் விஜய் ஐபேட் ப்ரோ பரிசளித்துள்ளார். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஒளிப்பதிவாளர் ராஜசேகர், அருண் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.