
நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘மலை மலை’, ‘மாஞ்சா வேலு’, ‘தடையறத் தாக்க’,‘வா’உள்ளிட்ட படங்களை தனது ஃபெதர் டச் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்த தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன், லேசான உடல்நலக் கோளாறு காரணமாக இன்று (27.04.2021) காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 68.

இவரின் இந்ததிடீர் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் என்.எஸ்.மோகனின் இறுதிச் சடங்குகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. அவரது உடல் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மாலை 4.30 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)