Advertisment

ஜிம்மில் கீழே விழுந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அருண் விஜய் அறிவுரை... 

arun vijay

மாஃபியா படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், அக்னி சிறகுகள், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கரோனாவால் இப்படங்களின் ஷுட்டிங்நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisment

நடிகர் அருண் விஜய் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் பல மெனக்கெடல்களை எடுப்பவர். என்றும் இளமையாகஅவர் தோன்றுவதற்கு உதவியாக இருப்பதுஅவர் ஜிம்மில் செலவிடும் அந்த கடினமான நிமிடங்கள்தான்.

Advertisment

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுகிறார். கொஞ்சம் பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ''எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். எப்போதுமே உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் ஜிம்கருவியைபரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நான் கிழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்'' என்று ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.

arun vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe